என் சிறு வயதில் என் நண்பனின் வீட்டுக்கு செல்வது வழக்கம், தினமும் சென்றதின் பயணாக நண்பனின் வீட்டில் ஒருவனாக என்னையும் நினைத்தார்கள். நண்பரின் அக்காவிற்கு திருமணம் முடிந்து இருந்தது, நான் அங்கு செல்ல ஆரம்பிக்கும் முன்பே. இருந்தும் அக்காவும் என்னை தம்பியாகவும் தோழனாகவும் பார்ப்பார்கள், பழகுவார்கள்.
நண்பனின் அக்காவிற்கு டைரி எழுதும் பழக்கம் அவர்களின் சிறு வயது முதலே இருந்தது. அதே டைரியில் அவர்கள் படித்ததில் பிடித்ததாக கவிதைகளும் ஹைக்கூவும் இடம் பெரும்.
என்னை தம்பியாக நினைத்ததைவிட தோழனாக தான் நினைத்தார்களோ என்னவோ என்னிடம் அவர்களின் கவலைகளையும் சரி, சந்தோஷங்களையும் சரி, என்னுடன் பகிர மறப்பதில்லை. அதை போல் அவர்களின் டைரியும் என்னுடன் பகிர தயங்கியதில்லை.
எப்போதும் அவரின் டைரியை படிப்பேன் என்றாலும் அன்று அவர்களை பாதித்த வரிகளில் என்னையும் பாதித்த வரிகள் என்னுள் என்றென்றும் ரணமாக யோசிக்க வைத்தது மட்டும் இல்லை, இன்றளவும் என்னுள் கல்வெட்டாய் பதிந்து விட்டது.
அப்படி என்ன அதில் இருந்தது என்று உங்களுக்கு தோணலாம். இதோ ...
ஒரு பெண்ணின் கண்ணீர் வரிகள் ..
கல்யாணம் செய்ய ஆசைப்பட்டேன் பணம் தடையாக இருந்தது...!!!
பணம் சம்பாரித்து விட்டு வந்தேன் வயது தடையாக உள்ளது...!!!
இதை படிப்போர்க்கு எந்த மதுரியான எண்ணங்களை தரும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் எனக்கு இதை படிக்கும் போதும் சரி, நினைக்கும் போதும் சரி மிகுந்த வேதனையை தருகிறது.
Quantity | |
---|---|
1.5 cup | |
1/2 cup |
---சாமுர---
No comments:
Post a Comment